கடலூர் உண்ணாமலை செட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர் இறங்கி ஓடிய நிலையில், பெண் ஒருவர் சிக்கினார்.காரில் சோதனையிட்ட போது 168 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விழுப்புரம் சங்கராபுரத்தை சேர்ந்த சமுத்திரக்கனி என்றும், தப்பியோடிவர் கடலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் சுந்தரேசன் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, சுந்தரேசனை சஸ்பெண்ட்செய்து விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
எழுதியவர்: mohan August 13, 2019, 10:59 am




You must be logged in to post a comment.