17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் அய்யயலூரில் சர்வதேச இளைஞர்கள் தின விழா!

திண்டுக்கல் மாவட்டம் அய்யயலூரில் சர்வதேச இளைஞர்கள் தின விழா!

எழுதியவர்: mohan August 13, 2019, 10:24 am

அய்யலூர் உயிர்வனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அய்யலூர் பேரூராட்சி, 11 வது வார்டு குளத்துப்பட்டியில் சர்வதேச இளைஞர்கள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்வுக்குஉயிர்வனம் அறக்கட்டளையின் நிறுவனர் & தலைவர் வி.பி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் வி.பி.எஸ்.அம்பிகை  முன்னிலை வகித்தார்.நிகழ்வில் ஏழை எளியோருக்கு உணவுக்கொடை அளிக்கப்பட்டது. மேலும் பல்வகை மரக்கன்றுகளும் நடப்பட்டது. சர்வதேச இளைஞர்கள் தினத்தின் சிறப்புகளையும் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு எத்தகையது என்பது குறித்தும் பொதுமக்களிடையே கருத்துப் பகிர்வும் அது சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். இறுதியில் (டிரஸ்டி உறுப்பினர்) விஜயன்  நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

ஜெ.அஸ்கா்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!