மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பொட்டல்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் இரு சமுதாய மக்கள் உள்ளனர்.இரு பகுதி மக்களும் தங்கள் பகுதியிலிருந்து உத்தப்புரம் கிராமத்திற்குச் செல்ல மழை நீர் கால்வாய் அமைந்துள்ள கால்வாயை கடந்துதான் செல்ல முடியும்.ஒரு பகுதி மக்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் அரசு சார்பில் பாலம் அமைக்கப்பட்டது.தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கிராமத்தினுள் செல்லும் பொது பாதையை உபயோகப்படுத்தி வந்தனர்.தற்போது அந்தக் கால்வாயின் அருகில் இடம் வாங்கியுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதியிலிருந்து செல்ல பாலம் அமைக்க முயன்றனர்.இதற்கு மற்றொரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவானது.இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜசேகரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு அதிகாரிகளைக் கொண்டு இரு தரப்பினரையும் அழைத்து சமாதானக்கூட்டம் நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி கோட்டாச்சியர் பானுகோபன் தலைமையில் அதிகாரிகள் கிராமத்திற்குள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் சிமிண்ட் பாலலத்திற்குப் பதிலாக பெரிய குழாய்கள் வைத்து அமைக்கப்படும் மண் பாலம் அமைக்க ஒத்துக்கொண்டனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே உருவான பிரச்சனை முடிவுக்கு வந்தது.
உசிலம்பட்டி அருகே கால்வாயை கடப்பதற்கு பாதை அமைப்பதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை உருவானதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.அரசு அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
எழுதியவர்: mohan August 12, 2019, 9:29 pm




You must be logged in to post a comment.