17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் புதிய கீழ்மட்டத்தொட்டி அமைத்திட பொதுமக்களிடம் நிதி வசூலிப்பதை தடுத்திட பொதுமக்கள் கோரிக்கை

குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் புதிய கீழ்மட்டத்தொட்டி அமைத்திட பொதுமக்களிடம் நிதி வசூலிப்பதை தடுத்திட பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan August 12, 2019, 8:51 pm

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் ஊராட்சி 1வது வார்டு பரும்பு நகர் பகுதியில் பாப்பாக்குடி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் புதிய கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு ரூ.2,83,000 நிதி ஒதுக்கிடு செய்து கட்டப்படும் நிலையில் மறைமுகமாக வார்டு மக்களிடம் வீட்டுக்கு ரூ.100 கட்டுமான பணிக்கு என கட்டாயப்படுத்தி வசூல் செய்து வருவதாகவும், காரணம் கேட்டால் கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு டெண்டர் உள்ள அளவு போல் இல்லை என கூறப்படுவதாகவும் இப்பகுதி மக்களிடையே வெளிப்படையாக பரவலாக பேசப்பட்டு வருகிறது..எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்களிடம் வசூல் செய்வதை தடுக்கவும் கட்டுமான பணிக்கு பற்றாக்குறை என்றால் கூடுதல் நிதியினை பாப்பாக்குடி ஒன்றிய நிர்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பரும்பு நகர் 1-வது வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!