திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ,முருகத்துரான்பட்டி அருகே உள்ள தெப்பன்குளம் கண்மாயில் தமிழக அரசின் சார்பில் குடிமராமத்து பணி நடைபெற உள்ளது.இப்பணியை செய்வதற்காக பகுதியில் உள்ள விவசாயிகளின் தலைமையில ஒரு சங்கம் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நிலக்கோட்டை அருகே கட்டக்கூத்தன் பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவரும் ஒரு சங்கத்தின் தலைவராகவும்,முருகதுரான்பட்டியை சேர்ந்த ஜான் இன்னாசி என்பவர் ஒரு சங்கத்தின் தலைவராகவும், பதிவு செய்து கொண்டிருந்தனா்..இதில் போட்டி ஏற்படவே 2 சங்கங்களுக்கு இடையே சமாதான கூட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் இரண்டு சங்கங்களின் ஒப்புதலோடு குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தலைவரும் தேர்வு செய்யப்பட்டு அரசின் குடிமராமத்து பணி நடைபெற்றது. இந்நிலையில் இதனை ஏற்க மறுத்த கட்டகூத்தன்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதனை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து வருகிற 12.08.2019 தேதி குல்லலக்குண்டு -ஊராட்சி பகுதியில் கிராமத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நிலக்கோட்டை தாசில்தார் நவநீத கிருஷ்ணன் தலைமையில் குல்லல்க் குண்டு ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சேவை மையத்தில் தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் விவசாயிகள் தொடர்ந்து காலை 11: 30 முதல் 12: 30 வரை வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து வாக்குகள் என்ன பட்டது. நடந்த தேர்தலில் மொத்த வாக்குகள் பதிவானவை 149.இதில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பரமசிவம் 25 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். இதே பகுதியைச் சேர்ந்த ஜான்இன்னாசி 121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சௌந்தர், உதவி பொறியாளர் நீதிபதி, தேர்தல் உதவி அலுவலர் டேனியல், தலைமையிடத்து துணை தாசில்தார் ராமசாமி, மண்டல துணை தாசில்தார் ருக்மணி, வருவாய் ஆய்வாளர் திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் ரகு, கிராம நிர்வாக உதவியாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை அருகே தொப்பன்குளம் கண்மாய் தேர்தலில் குளறுபடி ..தேர்தல் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
எழுதியவர்: mohan August 12, 2019, 8:24 pm




You must be logged in to post a comment.