17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி…

தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் April 3, 2017, 1:34 pm

கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூது தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் தொழில் முனைவோர் முன்னேற்ற கழகம் சார்பாக சென்னை கிண்டியில் இருந்து வட்டார இயக்குனர் R செந்தில் குமார், மதுரை உயர் கல்வி ஆராய்ச்சி மையத்தின் முதன்மை கல்வி அலுவலர் S . செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் கல்லூரியின் முதன்மை நிர்வாகி ரஹ்மத் நிஷா அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆங்கில துறை மற்றும் கணினி அறிவியியல் துறை சார்பாக செய்தி கட்டுரை தொகுப்புகள் மற்றும் IQRA Newsletter & Techy Talk என்கிற பெயரில் மின் இதழும் (e-magazine) வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரும் திரளாக கல்லூரி மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!