17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை பரபரப்பான பகுதியில் செயின் பறிப்பு முயற்சி..

கீழக்கரை பரபரப்பான பகுதியில் செயின் பறிப்பு முயற்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2019, 5:46 pm

இன்று (12/08/2019) பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு கீழக்கரையில் மணல் மேடு பகுதியில் சிறுவர் முதல் பெரியவர்கள் கூடுவது வழக்கம்.

இன்று மாலை நேரத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பல்சர் பைக்கில் வந்த மூன்று சமூக விரோதிகள் தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்கள்.  ஆனால் அப்பெண் தவறி விழுந்ததில் செயினும் விழுந்திருக்கிறது, பின்னர் அப்பெண் போட்ட கூக்குரலில் அப்பகுதி மக்கள் துரத்தி வந்துள்ளனர்.  உடனே செயினை பறித்தவர்கள் ஓடியுள்ளார்கள். மிகவும் பரபரப்பான நேரத்தில் செயின் பறிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக கீழக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!