திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 23) என்பவர் கடந்தமாதம் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சையத் பாபு பாலசமுத்திரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி(23) ரமேஷ் (23)வீரக்குமார்(26), ஆனந்த் (23) மந்தி(எ) சக்திவேல் (21) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இவர்கள் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஐந்து பேரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.
முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டதாக கைதான ஐந்து நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிழடைப்பு
எழுதியவர்: mohan August 12, 2019, 4:31 pm




You must be logged in to post a comment.