18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தாலுகா காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு வளாகங்களில் டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் மரக்கன்றுகளை நட்டனர்.

உசிலம்பட்டியில் தாலுகா காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு வளாகங்களில் டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் மரக்கன்றுகளை நட்டனர்.

எழுதியவர்: mohan August 12, 2019, 1:51 pm

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள் காவலர் நிலையங்களிலும் பசுமையாக்கும் விதத்தில் மரக்கன்றுகளை நடச்சொல்லி மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உசிலம்பட்டி காவல்துணைகண்காணிப்பாளர் ராஜா தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் ராஜா முதலில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வரிசையாக காவலர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து உசிலம்பட்டி கவண்டன்பட்டி ரோட்டில் உள்ள தாலுகா காவல் நிலைய வளாகத்தில் சார்பு ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் போலீசார் மரக்கன்றுகளை நட்டனர்.இதில் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டனர்.பசுமைச் சோலையாக மாற்றும் போலிசாரின் இந்த முயற்ச்சிக்கு பொதுமக்கள் பாராட்டுத்தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!