17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – பக்ரித் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள்  கலந்துகொண்டனர்.

மதுரை – பக்ரித் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள்  கலந்துகொண்டனர்.

எழுதியவர்: mohan August 12, 2019, 12:35 pm

தியாகத்திருநாள் என்னும் பக்ரித்பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும், திடல்களிலும் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மதுரை மஹபுப்பாளையம் பகுதியில் உள்ள திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதனையடுத்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர். இதே போல் மதுரை கோரிப்பாளையம் , நெல்பேட்டை, அவனியாபுரம், திருமங்கலம், மேலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!