18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம்-அமைச்சர்மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர்

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம்-அமைச்சர்மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர்

எழுதியவர்: mohan August 12, 2019, 11:57 am

பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் கோவில் என்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா தேராேட்டம் சிறப்பாக நடைபெற்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி துவங்கி வைத்தார்.நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்ட விழா  நடைபெற்றது.விழாவினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இந்த தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!