18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மிஸ்டர் ராம்நாடு மாவட்ட ஆணழகனாக வங்கி மேலாளர் தேர்வு

மிஸ்டர் ராம்நாடு மாவட்ட ஆணழகனாக வங்கி மேலாளர் தேர்வு

எழுதியவர்: mohan August 12, 2019, 11:51 am

இராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், ராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது மிஸ்டர் இராம்நாடு மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது. தலைவர் எம்.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தார். சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எம்.நூர்முகமது, தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கே.கணேஷ கண்ணன், தொழிலதிபர்கள் ஏ.ஆஷிக், அவின்கோ ஏ.வி.கே.ராஜா முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் எஸ்.எஸ்.ஆனந்தன் வரவேற்றார். 55, 60, 65, 70, 75 கிலோ எடை பிரிவுகளில் தலா 10 பேர் கலந்து கொண்டு, 8 கட்டங்களாக தங்கள் கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பு திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 பேர் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்றிடம் பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல ஆணழகன் உருவச் சிலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 4, 5 இடங்களை பிடித்தவர்களுக்கு நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. எஞ்சிய வீரர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. 55, 60, 65, 70, 75 கிலோ எடை பிரிவுகளில் முதல் இடம் பிடித்த சசிகுமார், சேசு அந்தோணி ஆர்டெக், முகமது ஒசாமா, பாலமுருகன், ராஜமுருகன் ஆகியோர் சாம்பியன்ஸ் ஆப் தி சாம்பியன் இறுதிச் சுற்று போட்டிக்கு அழைக்கப்பட்டனர். இதில் 70 கிலோ எடை பிரிவு பாலமுருகன் மிஸ்டர் இராம்நாடு மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆணழகனாக தேர்வான பாலமுருகன், தமிழ்நாடு கிராம வங்கி ஏர்வாடி கிளை மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு , சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மிஸ்டர் வேர்ல்டு, மிஸ்டர் ஆசியா, ஐந்து முறை மிஸ்டர் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.பாஸ்கரன் சாம்பியன் பட்டம் வழங்கி கவுரவித்தார்.மிஸ்டர் வேர்ல்டு எஸ்.பாஸ்கரன் பார்வையாளர்கள் முன் மேடையில் தோன்றி தனது உடல் தசை கட்டமைப்பு திறனை வெளிப்படுத்தினார்.மதுரை அயர்ன் ஜேபிஆர் போஸ், தேசிய நடுவர் ஜே.ஏ.மயில்சாமி (சேலம்), மாநில நடுவர்கள் எஸ்.சுந்தரமூர்த்தி (திருச்சி), ஆர்.முத்துக்குமார் (மதுரை), டி.ஆர்.எஸ்.சுதன் (திருச்சி ) ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பொருளாளர் ஏ.போரீஸ்டன் நன்றி கூறினார்.மாவட்ட துணை பொதுச் செயலாளர் எம்.உதயகிரி, மாவட்ட நிர்வாக துணைத் தலைவர் வி.விஸ்வநாதன், செயல் தலைவர் எல்ஆர்சி ராஜசேகர், போஸ்ட் மாஸ்டர் பா.வினோத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!