17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தினசரி காய்கறி வியாபாரிகள் போராட்டம் அறிவிப்பு

நிலக்கோட்டை தினசரி காய்கறி வியாபாரிகள் போராட்டம் அறிவிப்பு

எழுதியவர்: mohan August 12, 2019, 11:44 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி கடைகள் சுமார் 144 உள்ளது.       இந்தக் கடைகளை கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள கிராமப் பகுதி மக்கள் சிறு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.    கடந்த சில தினங்களுக்கு முன்பு தினசரி சந்தை   ஏலம் நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமிதலைமையில் நடத்தப்பட்டது.  நிலக்கோட்டை யைச் சேர்ந்த மணி ராஜா என்பவர் தினசரி சந்தை வரி வசூல் ஏலத்தை 22 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு    ஏலம் எடுத்தார்.      இதனை  தொடர்ந்து கடந்த சில தினங்களாக தினசரி சந்தை சிறு காய்கறிகள் வியாபாரிகளிடம் வெளி மார்க்கெட்டில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து விற்கும் காய்கறி மூட்டைகளுக்கு இதுவரை வரி கேட்காமல் புதிதாக வரி வசூல் கேட்டதாகவும், இதை கொடுக்காத காரணத்தால் உரிய காய்கறி மூட்டைகளை இறக்க விட வில்லை எனவும் கூறப்படுகிறது.       இதற்கு கண்டனம் தெரிவித்து சிறு வியாபாரிகள்  சங்கத்தினர் உடனடியாக திரண்டு நிலக்கோட்டை பேரூராட்சி தினசரி சந்தைக்கு வெளியூர்களில் இருந்து வரும் காய்கறி மூட்டைகளுக்கு வரி வசூல் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து  வருகின்ற 13,14,15.08.2019 ஆகிய மூன்று நாட்கள் கடை அடைப்பு போராட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.. நிலக்கோட்டை சிறு காய்கறிகள் வியாபார சங்க தலைவர் பாலு தலைமையில் சிறு வியாபாரிகள் ஒன்றுதிரண்டு நேற்று காய்கறிகள் கடை முன்பு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள்

செய்தியாளா் ராஜா நிலக்கோட்டை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!