17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

இராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

எழுதியவர்: mohan August 12, 2019, 11:17 am

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒர முள்ள ஈதுகா பள்ளிவாசல் மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர்.இராமநாதபுரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை முஸ்லிம்கள் பங்கேற்பு.இராமநாதபுரம் தமுமுக., சார்பில் புனித ஹஜ் (பக்ரீத்) பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலக முஸ்லிம்களால் ஈகை திருநாளாக புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் வசந்த மா மகால் நபி வழி திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் பரக்கத் துல்லா, நகர் செயலாளர் பெரோஸ்கான், நகர் நிர்வாகிகள் சதக் தம்பி, மன்சூர் அலி, மாவட்ட தலைவர் அன்வர் அலி, மாவட்ட செயலாளர் சிக்கல் பாகீர் அலி, பொருளாளர் நம்புதாளை பாரீஸ், துணை செயலாளர் ஜஹாங்கீர் அலி, துணை தலைவர் சிராஜ்தீன், மாவட்ட நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், அஜீஸ் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஒருவரை, ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!