18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

எழுதியவர்: mohan August 11, 2019, 3:40 pm

 வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்ஜிஆர் நகரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை கோ பூஜை ‘கணபதி, துர்கா ஹோமம் வாஸ்து ஹோமம், கலச பூஜை, அஷ்டபந்தனம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் இன்று ஞாயிற்றுகிழமை கலச பூஜை, சர்வதேவதா ஹோமம் கலச புறப்பாடு பின்பு அகோரகாளி, பிரித்திங்கிராதேவி, வராதி தேவி, சாமுண்டிதேவி, துர்காதேவி, ஆகியோருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி , முனீஸ்வரன் ‘கபால பைரவர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும் பகல் அன்னதானமும் நடந்தது.ஏற்பாட்டை கிராம மக்கள் சார்பில் கோவில் நிர்வாகி ராம்ராஜ் சாமியார் அருணாதேவி குடும்பத்தினர் செய்து இருந்தனர். கும்பாபிஷேகத்தில சிறப்பு அழைப்பாளர்களாக ஆற்காடு SSS கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்வம், வேலூர் கோட்டை நாகதேவி கோவில் சாமியார் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!