17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் இயற்கை முறையில் விநாயகர் சிலை செய்வதில் ஆர்வம் காட்டும் இளைஞர்.

உசிலம்பட்டியில் இயற்கை முறையில் விநாயகர் சிலை செய்வதில் ஆர்வம் காட்டும் இளைஞர்.

எழுதியவர்: mohan August 11, 2019, 11:52 am

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் இவ்வேளையில் உசிலம்பட்டியில் இயற்கை முறையில் சாமி சிலைகள் செய்வதில் இளைஞர் ஆர்வம் காட்டி வருகின்றார். சுhமி சிலை என்றாலே களிமண்ணுடன் சில இரசாயன மூலப்பொருட்கள் கலந்து சிலைகள் செய்வதுதான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் விநாயகர் சதுர்த்;தியின் போது இராசயனக்கலவை கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் தண்ணீர் மாசுபாடு நில மாசுபாடு ஏற்படுகிறது.இவற்றை தவிர்க்கும் வகையில் இயற்கைப் பொருட்களை கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் சாமி சிலைகள் தயாரித்து வருகிறார் உசிலம்பட்டி இளைஞர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ளது பூதத்து அய்யனார் கோவில.;இக்கோவில் பூசாரியாக இருப்பவர் சிவக்குமார் (18). சிறு வயது முதலே சிலைகள் செய்வதில் ஆர்வம் கொண்டவரான இவர் இயற்கை பொருட்களான யானை சாணம் மாட்டுச்சாணம் உமி வைக்கோல் போன்ற இயற்கைப் பொருள்களைக் கொண்டு சாமி சிலைகள் தயாரித்து வருகிறார்.அம்மன் சிலை நாய் சிலை குதிரை சிலை சிவன் சிலை விநாயகர் சிலை போன்ற சிலைகளை சாமிசிலை அச்சு இல்லாமல் கைகளாலேயே வடிவமைத்து வருகிறார்.5 அடி முதல் 10 அடி வரை சிலைகள் செய்கின்றார்.அச்சு வார்ப்பில் ஓரே மாதிரியான சிலைகளாக இல்லாமல் ஒவ்வொன்றும் கைப்பக்குவத்தில் மாறி மாறி வருவதால் பொதுமக்கள் இச்சிலைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருவதால் தற்போது விநாயகர் சிலைகள் செய்வதில் ஆர்வம காட்டி வருகிறார்.இதே போல் கிராமமக்களும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத விநாயகர் சிலைகனை தங்கள் கிராமத்தில் வைத்து கொண்டாட சிலைகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.சிவக்குமாரைப் போல அனைத்துப் பணிகளிலும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வேலைகளை உருவாக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!