18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது செய்தனர்.

மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது செய்தனர்.

எழுதியவர்: mohan August 11, 2019, 11:11 am

மதுரை மாவட்டம்  மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது செய்தனர். மேலூர் அருகே நான்கு வழிச்சாலை ,சாலைக்கிபட்டி பிரிவு அருகே லாரியில் வந்த டிரைவர் முகம்மதுபரீத்டம் ஒரு வழிப்பறி கும்பல் விபத்து நடந்தது போல் நாடகமாடி, ரூ-12 ஆயிரத்தை வழிப்பறி செய்து, மினி வேனில் தப்பிச் சென்றனர்.இந்த சம்பவம் மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலூர் இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு விரட்டி சென்று வாக்கிடாக்கியை துப்பாக்கி போல் காண்பித்து கவிராஜா (25) மகேஸ்வரன் (28) கார்த்திக்ராஜா (28) ஆகிய மூன்று நபர்களை கைதுசெய்து, பணத்தை பறிமுதல் செய்து, முகம்மதுபரீத்  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த துரிதமான செயலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன்  வெகுவாக பாராட்டினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!