17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

மதுரையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

எழுதியவர்: mohan August 10, 2019, 8:56 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஹாஜிமார் பள்ளிவாசல் தெரு, தெற்குவாசல், தெற்கு மாரட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இன்றி கடும் தட்டுப்பாடு உள்ளதாகவும், குடிநீர் வழங்க கோரி்பல முறை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசிடம் முறையிட்டும் அரசு கண்டுகொள்ளாத நிலையில் இன்று 10.08.19அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் விமானநிலையம் செல்லகூடிய தெற்குமாரட் வீதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி மற்றும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில் போராட்டமானது ஒரு மணி நேரமாக நீடித்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் செல்லமுடியாத நிலை உருவானது.குடிநீர் தீர்வு எட்டப்படாத நிலையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனிடையே ஒரு புறம் குடிநீர் தட்டுப்பாடு மதுரையில் பல பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது இதை பலமுறை அதிகாரிகளுடனும் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அந்த நீரை வழங்கினாலே மூன்று வார்டுகளுக்கு குடிநீரை சப்ளை செய்துவிடலாம் இதனை கவனத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!