17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரம் நடும் விழா

மரம் நடும் விழா

எழுதியவர்: mohan August 10, 2019, 11:38 am

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் வடுகபட்டி  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள குப்பைக்கிடங்கை அகற்றி வளமான வனமாக மாற்றும் விதத்தில் “பசுமை வடுகை” ,  விழுதுகள்,அமைப்புகள் சார்பில் “ஜல்சக்தி அபியான் “, நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் மரம் நடும் விழா நடைபெற்றது. பசுமை வடுகை அமைப்பு தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்  ஜெயப் பிரித்தா, வடுகபட்டி தேர்வு நிலை பேரூராட்சி செயலர் கணேசன், மற்றும் பசுமை வடுகை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!