வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் வழங்கினார்.வேலூர் பாராளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த காரணத்தால் முதலில் தேர்தல் ரத்தானது. மீண்டும் தேர்தல் அறிவித்த போது மீண்டும் கதிர் ஆனந்துக்கு திமுக சீட் தொடுத்தது. அதிமுக சார்பில் மீண்டும் ஏ.சி.சண்முகத்துக்கு சீட் கொடுக்கப்பட்டது. கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 10, 26, 055 வாக்குகள் பதிவாகின. திமுக கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் அதிமுக ஏ.சி.சண்முகம் 4,77, 199 வாக்குகள் பெற்றனர்.8, 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வென்றது. அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீபலட்சுமி 26,995 வாக்கு பெற்றார்.
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி..
எழுதியவர்: mohan August 10, 2019, 10:00 am




You must be logged in to post a comment.