திண்டுக்கல்லில் 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கப்பர்ராஜா என்பவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அவரை போலீசார் தேடப்பட்டு வந்த நிலையில் பாறைப்பட்டி பகுதியில் கப்பர்ராஜா இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சேக்தாவூத், ஜான்சன் மற்றும் காவலர் ராஜசேகர் ஆகியோர் விரைந்து சென்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது
எழுதியவர்: mohan August 10, 2019, 9:52 am




You must be logged in to post a comment.