18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

எழுதியவர்: mohan August 9, 2019, 9:00 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்கள் காவல்துறை மூலம் பெறப்பட்டு திண்டுக்கல் மாவட்ட CYBER CRIME போலீசாருக்கு அனுப்பப்பட்டது. உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ராஜசேகர் மற்றும் காவலர்  மணிகண்டன் ஆகியோர் கொண்ட CYBER CRIME போலீசார் காணாமல் போன செல்போன்களை கணினி உதவி மூலம் கண்டுபிடித்து கொடுத்தனர். கண்டுபிடிக்கப்பட்ட 45 செல்போன்களையும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அதன் உரிமையாளர்களை அழைத்து செல்போன்களை ஒப்படைத்தார். செல்போன்களை பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் துரித நடவடிக்கை மேற் கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து செல்போன்களை மீட்டு தந்து உதவிய காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!