பாம்பன் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக வருகின்ற ஆகஸ்ட்டு 15 கிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் முகமாக தொடர்ந்து விளம்பர படுத்த வேண்டும் எனவும் .தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்கிறார்கள் அவ்வாறு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறை சார்ந்த அதிகாரிகள் மீது தீர்மானம் இயற்றவும். 33 துறை சார்ந்த அதிகாரிகள் கண்டிப்பாக கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள செய்யும் படி வேண்டி பாம்பன் பொதுமக்கள் சார்பாக ஊராட்சி செயளர் .விஸ்வநாதன் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதில் சமூக ஆர்வலர் ராமசாமி, விடுதலை சிறுத்தை மாநில துணை செயலாளர் .முத்து வாப்பு, மண்டபம் ஒன்றிய மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர்.ராஜ்கபூர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாம்பன் பொதுமக்கள் சார்பாக ஊராட்சி செயளரிடம் கோரிக்கை மனு
எழுதியவர்: mohan August 9, 2019, 8:31 pm




You must be logged in to post a comment.