18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற கோரி தவ்ஹீத் ஜமாத் முற்றுகை ஆர்ப்பாட்டம்…

கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற கோரி தவ்ஹீத் ஜமாத் முற்றுகை ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் August 9, 2019, 5:14 pm

கீழக்கரை மக்களின் பொது பிரச்சினையாகவும், முக்கிய பிரச்சினையாகவும் இருப்பது மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் அமைந்திருக்கும் மதுக்கடைகளாகும்.  இந்த மக்கள் பிரச்சினைக்காக ஒவ்வொரு அமைப்புகளும் தனிதனியாக போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி தங்களுடைய பலத்தையும், எதிர்ப்பையும் பல் வேறு வகையில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (09/08/2019) கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக முற்றுகை ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் கடைகளின் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தவ்ஹீத் ஜமாத் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிந்தனர்.

இப்போராட்டத்தில் கண்டன உரையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் நெல்லை பைசல் வழங்கினார். இப்போராட்டத்திற்கான பாதுகாப்பு  ஏற்பாடுகளை கீழக்கரை காவல்துறையினர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!