18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உள்சக்கர சங்கத்தின் சார்பாக முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆதரவற்றோர் அற்ற இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

உள்சக்கர சங்கத்தின் சார்பாக முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆதரவற்றோர் அற்ற இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2019, 11:15 pm

இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று (07.08.19) மாலை 2.30மணி அளவில்  உள் சக்கர சங்கத்தின் சார்பாக ஆதரவற்றோர் அற்ற இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் விருந்தினர் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.  சிறப்பு விருந்தினர்கள் R.கவிதா செந்தில்குமார், உள்சக்கர சங்கத்தலைவர், இராமநாதபுரம்,  ஆதரவற்றோர்களுக்கு அமைக்கப்பட்ட மம்தா திட்டம் பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து Dr. வித்யா பிரியதர்ஷினி, உள் சக்கர சங்கம் ஒருங்கிணைப்பாளர், ஆரோக்யா ஹோமியோகேர் இராமநாதபுரம்  இந்தியாவில் 20 மில்லியன் குழந்தைகள் ஆதரவு இல்லாமல் உள்ளதாகவும், அவர்களை பாதுகாக்கவும், உதவி செய்யவும் வேண்டும் என்றும், முறையற்ற கருக்கலைப்பை தடுக்க வேண்டும் என்றும் கூறி சிறப்புரை ஆற்றினார். இரண்டாமாண்டு கணிதவியல் துறையைச் சார்ந்த மாணவி M.அபிநயா மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுமாறு பேசினார்.

இக்குழுவின் சார்பாக பள்ளிகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற நேஷனல் அகாடமி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ஆங்கிலத் துறைத் தலைவர் K.மெகரூன்னிஷா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!