17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் கத்திமுனையில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு

இராமநாதபுரத்தில் கத்திமுனையில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு

எழுதியவர்: mohan August 7, 2019, 8:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சுந்தரமுடையான் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சமயாண்டி, 39. இவர் தனது ஆட்டோவை ஆக., 6 இரவு, இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒர்க் ஷாப்பில் வேலைக்கு நிறுத்தினார். நீண்ட நேரமானதால் ஆட்டோவில் தூங்கிய சமயாண்டி ஆக., 7 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் டீ குடிக்க புதிய பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் , கத்திமுனையில் சமயாண்டியிடமிருந்து செல்போனை பறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது, மற்றொரு வாகனம் வந்ததும் சமயாண்டியை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். சமயாண்டி புகாரின் பேரில் ,இ ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், இராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் பிரபாகரன் மகன் பிரபு தேவா 24, தங்கப்பா நகர் ரமேஷ் 40, கான்சாகிப் தெரு சித்திக் மகன் அசரப் அலி 22 ஆகியோர் என தெரிந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!