17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் தொடர் கொள்ளை ஆறு பேர் அதிரடி கைது…35 பவுன் பறிமுதல்..

பரமக்குடியில் தொடர் கொள்ளை ஆறு பேர் அதிரடி கைது…35 பவுன் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2019, 9:29 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தொடர் கொள்ளை அரங்கேறியது. இதனையடுத்8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுரையின் பேரில் பரமக்குடி தாலுகா காவல் உதவி ஆய்வாளர் ராமசுப்ரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந் நிலையில், பரமக்குடி ஓட்டப் பாலம் பகுதியில் ஜூலை 28 ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமாக நின்ற  ஒருவரை பிடித்து. விசாரித்ததில், தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த ராசு மகன் கருமலையான் 45 எனவும், இதே பகுதியைச் சேர்ந்தவெள்ளையன் மகன் அய்யப்பன் 20, அமாவாசை மகன் வெள்ளி கண்ணன் 32, சின்னமனூர் அஜீஸ் மகன் ஹக்கீம் ராஜா 38, பரமக்குடி பாலன் நகர் ஆறுமுகம் மகன் குமார் 20 ஆகியோருடன் சேர்ந்து பரமக்குடி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தோம் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். அவர்களிடமிருந்து முப்பதே கால் பவுன் நகையை பறிமுதல் செய்தனர். ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், பரமக்குடி ஐந்து முனை சந்திப்பு, அரசு மருத்துமனை பகுதிகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரு வேறு திருட்டு சம்பவங்கள் நடந்தன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவுகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி, பரமக்குடி சுந்தரராஜ பட்டினம் காளிமுத்து மனைவி பானுப்பிரியா 30, தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து பானுப்பிரியாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஐந்தரை பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இவர் மீது அபிராமம் போலீசில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!