18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடைபெற்ற ஆலோசனை கூட்டம்..

கீழக்கரையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடைபெற்ற ஆலோசனை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2019, 6:40 pm

கீழக்கரையில் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.கீழக்கரைக்கு குடிநீர் பக்கத்து கிராமமான அலவாக்காரவாடியில் இருந்து வாகனங்களில் எடுத்து கீழக்கரையில் வியாபாரம் செய்து வருகின்றார்கள்.

தற்போது மழை இல்லாத காரணத்தால் குடிநீரை வியாபார நோக்கத்தில் ஹோட்டல்கள் மற்றும் கட்டுமான வேலைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் குடிநீர் எடுப்பதில் தொடர்ந்து பிரச்சினை எழுந்தது.

இது சம்பந்தமாக இரண்டு ஊரை சேர்ந்தவர் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் அடிப்படையில் இன்று மாலை லட்சுமிபுரத்தில் தனியார் திருமணம் மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அலவகாரவாடி சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இஸ்லாமிய கல்வி சங்கம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம், இந்தியா யூனியன் முஸ்லிம் லீக், மஜ்மாவுல் ஹைராத்தியா கல்வி அறக்கட்டளை, சட்ட விழிப்புணர்வு இயக்கம் ஆகிய பிரதிநிதிகள் மற்றும் பல சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் காலை 6 மணி முதல் பகல் மூன்று மணி வரை தற்போது குடிநீர் எடுக்கும் 9 வண்டிகள் மட்டும் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்றும், எக்காரணத்தை கொண்டும் பொதுமக்கள் குடிநீர் தேவையை தவிர வேறு நோக்கத்திற்கு விற்பனை செய்ய கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!