இராமேஸ்வரம் மல்லிகா நகர் துரைசிங்கம் என்பவருக்குச் சொந்தமான படகில் மீனவர் 7 பேர்,ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை 27 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு பழுதானது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த மீனவர்கள் ஜோசப் பால்ராஜ் ,பெனிட்டோ,நாகராஜ்,இன்னாசி,சுப்ரமணி,முனியசாமி,சத்தியசீலன் ஆகியோரை படகுடன் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். ஏழு பேரையும் படகுடன் இலங்கை கொண்டு சென்று தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி பக்ருதீன் உத்தரவிட்டதையடுத்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் நாளை (ஆக., 7) மீண்டும் ஆஜர்படுத்தப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தங்கள் குழந்தை களுடன் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.
இராமேஸ்வரம் மீனவர் 7 பேரை விடுதலை செய்யக்கோரி இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு
எழுதியவர்: mohan August 6, 2019, 5:20 pm




You must be logged in to post a comment.