17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் ஆடித் திருக்கல்யாணம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் ஆடித் திருக்கல்யாணம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எழுதியவர்: mohan August 6, 2019, 5:15 pm

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்ஆடி திருக்கல்யாண திருவிழா ஜூலை 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 31 ஆம் தேதிஆடி அமாவாசையை முன்னிட்டு வெள்ளி தேரோட்டம், ஆக., 4 ஆம் தேதி ஆடிப்பூரத்தையொட்டி மாலை மாற்றுதல், பூ பல்லாக்கு நடந்தது. 12 ஆம் நாள் விழாவாக ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் தெற்கு வாசல் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், திருமண சம்பிரதாயச் சடங்குகள் நடந்தன. புடவை, பழங்களை பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.

கோயில் தலைமை குருக்கள் விஜயகுமார் போகில் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் பர்வத வர்த்தினி அம்பாளுக்கு கட்டி திருக்கல்யாணம் நடந்தது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி,இந்து அறநிலையத் துறை இணை ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான கல்யாணி, உதவி ஆணையர் ஜெயா, கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், நேர்முக உதவியாளர் கமலநாதன், மேலாளர் முருகேசன், பேஷ்கர்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கண்ணன், செல்லம் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!