17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுபான பார் ஏலம்எடுக்கும் விண்ணப்பத்தை அதிகாரிகள் தர மறுப்பதைக் கண்டித்து மதுபானம் உரிமையாளர் சங்கத்தினா் மதுபானமண்டலத்தை முற்றுகை போராட்டம்.

மதுபான பார் ஏலம்எடுக்கும் விண்ணப்பத்தை அதிகாரிகள் தர மறுப்பதைக் கண்டித்து மதுபானம் உரிமையாளர் சங்கத்தினா் மதுபானமண்டலத்தை முற்றுகை போராட்டம்.

எழுதியவர்: mohan August 6, 2019, 4:50 pm

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான பார் உரிமை ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் பார் உரிமை ஏலம் எடுக்கும் விளம்பரம் கடந்த 28ஆம் தேதி நாளிழ்களில்    வந்தது.  பார் உரிமையாளர்கள் தங்கள் கட்ட வேண்டிய தொகையை வங்கி மூலம் DDஎடுத்து கொண்டுவந்து மதுரை கப்பலூர் உள்ள மதுபான மதுரை மண்டல அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம்       விண்ணப்பத்தை பார் உரிமையாளர் கேட்டனர் ..அதற்கு அதிகாரி  எங்களுக்கு இதுவரை விண்ணப்பம் வரவில்லை என்று கூறியுள்ளனா்.  விண்ணப்பம் கேட்டு வரும்     மதுபான பார் உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் அதிகாரிகளால் அலைகழிப்பட்டுள்ளனர் இந்த விண்ணப்பப் பாரம் வருகின்ற 13 ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். நாட்கள் குறைவாக உள்ளநிலையில் அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். இதனை கண்டித்து மதுரை கப்பலூர் உள்ள மதுரை மண்டல டாஸ்மாக் அலுவலகத்தை  மதுரை மாவட்ட மதுபான பார் உரிமையாளர் சங்கம் சார்பில்  நிர்வாகி அறிவுச்செல்வன் தலைமையில்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது ..இதில் மதுரை மாவட்டம் மதுபானம் உரிமையாளர் சங்க அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!