17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. மதுபான கடைகளுக்கு மூடுவிழா நடக்குமா??

கீழக்கரையில் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. மதுபான கடைகளுக்கு மூடுவிழா நடக்குமா??

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2019, 11:52 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கீழக்கரை நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரையில் கடற்கரை பகுதிகள் மற்றும் கீழக்கரை பிரதான சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரையில் பெரும்பாலான பகுதிகளில் நகராட்சி மின் விளக்குகள் எரியாமல் இருப்பதை நகராட்சி ஆணையரிடம் சுற்றி காட்டியதோடு பல இடங்களில் சாலைகள் மற்றும் சிதிலமடைந்த வாறுகால்களை சரி செய்ய உத்தவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் கீழக்கரைக்கு வந்து இருப்பதை அறிந்த பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் மதுபானக்கடைகளை நேரில் பார்க்க கேட்டு கொண்டார். பொதுமக்களின்  கோரிக்கையை ஏற்று இரண்டு மதுபானக்கடைகள் இருக்கும் பகுதியை நேரில் ஆய்வு செய்து பிரதான பேருந்து நிலையம், மீன் மார்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு மதுபானக்கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அங்கு இருந்த பொதுமக்களிடம் தெரிந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது ஆட்சியருடன் நகராட்சி ஆணையர், கீழக்கரை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!