தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க இராமநாதபுரம் மாவட்ட கிளை ஆறாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. மின் அமைப்பாளர்களுக்கு சலுகைகளை முறைப்படுத்த வேண்டும், குடும்ப வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் , தொழில் பாதுகாப்பு உறுதி படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இராமநாதபுரம் மின் வாரிய சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், மின் அமைப்பாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் குமரகுருபரன் , இணைச் செயலாளர் அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ரயில்வே தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகவேல், உதவி மின் பொறியாளர் குருவேல் உள்பட பலர் பேசினர். இராமநாதபுரம், சிவகங்கை, சேலம், திண்டுக்கல், காரைக்குடி, சென்னை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மின் அமைப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தோழமை மற்றும் ஆதரவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க ஆண்டு விழா
எழுதியவர்: mohan August 5, 2019, 2:23 pm




You must be logged in to post a comment.