18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடியில் குடிநீர் நிறுத்தம் சாலை மறியல்

சாயல்குடியில் குடிநீர் நிறுத்தம் சாலை மறியல்

எழுதியவர்: mohan August 5, 2019, 2:12 pm

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகமில்லை. விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை . இது தொடர்பாக சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் குடிநீர் தேடி அலைந்து திரிந்ததால் ஆவேசமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன்  பஸ் மறியலில் ஈடுபட்டனர். தகவல் படி சாயல்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, வி.ஏ.ஓ., ஜெயக்கொடி ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். தண்ணீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால்பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட வாகன போக்குவரத்து மீண்டும் தொடர்ந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!