18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இன்னர்வீல் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

இராமநாதபுரத்தில் இன்னர்வீல் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

எழுதியவர்: mohan August 4, 2019, 6:20 pm

இராம்நாடு இன்னர் வீல் சங்கம் சார்பில் அனாதைகள் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் திட்டம், தாய்ப்பால் வார விழா மற்றும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அணியும் விழா அரவிந்த அரங்கத்தில் நடைபெற்றது . இன்னர்வீல் சங்க மாவட்ட சேர்மன் 321 லட்சுமி வர்த்தினி ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இன்னர்வீல் தலை வி கவிதா செந்தில்குமார் வரவேற்றார்.மன நிலை குறித்து மூத்த டாக்டர் மதுரம் அரவிந்தராஜ், கர்ப்ப கால பராமரிப்பு குறித்து டாக்டர் ரஷிகா, தாய்ப்பாலின் அவசியம் குறித்து டாக்டர்ஷர்மிளா சீனிவாசன், குழந்தைகள் நலம் குறித்து டாக்டர் ஆயிஷத் நஷிதா அட்டீப் ஆகியோர் பேசினர். அனாதைகள் இல்லா இந்தியா உருவாக்குவோம் என்ற தலைப்பிலான ஓவியம், வாசகம் எழுதும் போட்டியில் சுவார்ட்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி, நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி, வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளி, லூயிஸ் லெவல் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் 256 பேர் கலந்து கொண்டனர்.

. ராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் முதல் மூன்று இடங்கள் மாணவிகள் டி.ஆதி ஹரிணி, பி.விஷ்ணு பிரியா, எஸ்.யோகேஸ்வரி, ஓவியப் போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகள் ஏ.சத்திய பிரியா, ஏ. திவ்ய தர்ஷினி, ஜெ.ஷாஜூ ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. சுவார்ட்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஓவியப்போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகள் பி.காவ்ய ஸ்ரீ, கே.தயா ஸ்ரீ, ஆர்.க பி, விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவிகள் பி.ரோஹிலா பர்வீன், எஸ்.ரோஷினி ஆகியோர் பரிசு பெற்றனர். லூயிஸ் லெவல் மெட்ரிக்., பள்ளியில் நடந்த ஓவியப்போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த பி.நிலோபர் நிஷா, ஜி.கீர்த்திகா ஆகியோர் பரிசு பெற்றனர். ஓவியப்போட்டியில் ஒட்டு மொத்த முதல் பரிசு பெற்ற சுவார்ட்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ஜனனிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. டாக்டர் கனக பிரியா, கவிதா லோகநாதன், ஹிருத்திகா சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 75 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.செயலாளர் ஹிருத்திகா ரகுநாத் நன்றி கூறினார், பிரதா சிவக்குமார் தொகுத்து வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!