17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » இன்றைய நிகழ்ச்சி » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரையில் DSP மகேஸ்வரிக்கு பிரிவுபசார விழா – கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர்’ விருது வழங்கி கவுரவிப்பு

கீழக்கரையில் DSP மகேஸ்வரிக்கு பிரிவுபசார விழா – கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர்’ விருது வழங்கி கவுரவிப்பு

எழுதியவர்: keelai April 1, 2017, 9:42 pm

கீழக்கரை நகரில் சிறப்பாக பணியாற்றி தற்போது விருதுநகருக்கு பணியிட மாறுதலில் செல்லும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரிக்கு இன்று மாலை 5 மணியளவில் ஹுசைனியா மஹாலில் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது நேர்மையோடும், கொள்கை பிடிப்போடும் கீழக்கரை நகரில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதினை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஸ்டேஷன் மாஸ்டர் M.M.S.செய்யது இபுறாகீம் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி பேசியதோடு மட்டுமல்லாமல், DSP மகேஸ்வரிக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர். பல்வேறு சமுதாய அமைப்பினர் சார்பாக பொன்னாடைகளும், நற்சான்றுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருது நகருக்கு செல்லும் நம் விருது மங்கை, இன்னும் பல சாதனை விருதுகளை வெல்ல கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!