18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பத்திரிக்கையாளர் அமைப்பின் விருது வழங்கும் விழா

பத்திரிக்கையாளர் அமைப்பின் விருது வழங்கும் விழா

எழுதியவர்: mohan August 3, 2019, 9:31 pm

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அஞ்சப்பரில் PRESS & MEDIA PEOPLES ASSOCIATION எனும் பத்திரிக்கையாளர் அமைப்பின் விருது வழங்கும் விழா நடைபெற்றது .இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியாளர் ஸ்ரீமதி கேசன்  தலைவர் மெர்சி செந்தில் பொதுச் செயலாளர் ரபீக் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அமைப்பினுடைய நிறுவனர் தலைவர் கலைவாணி மற்றும் அந்த அமைப்பின் முதன்மை செயலர் தஹ்மிதா பானு ஆகியோருக்கு  சாதனையாளர் 2019 என்று விருது வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வதிலை எக்ஸ்பிரஸ் மாத இதழ் நிறுவனரும் பதிப்பாசிரியருமான பிரஸ் மீடியா அசோசியேஷன் பொதுச்செயலாளருமான ரபீக் அகமது செய்திருந்தார். இதில் பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷனை சேர்ந்த பலர் பங்கேற்றனர். வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் கலைவாணி  சத்ய பாதை மாத இதழின் நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இவர் வதிலை எக்ஸ்பிரஸ் மாத இதழிலும் தன்னம்பிக்கை கட்டுரைகளை உளவியல் ரீதியில் எழுதி வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!