17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் (WJUT) புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு.!சத்தியபாதை ஆசிரியர் மாநில இணை செயலாளராக நியமனம்…

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் (WJUT) புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு.!சத்தியபாதை ஆசிரியர் மாநில இணை செயலாளராக நியமனம்…

எழுதியவர்: mohan August 3, 2019, 9:11 pm

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் WJUT – Working Journalist Union Of Tamilnadu) மாநிலத் தலைவர்அ.ஜெ. சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் வெளியிட்டுள்ள நிர்வாகிகள் நியமன அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சத்திய பாதை இதழின் ஆசிரியரும் மற்றும் கீழை நியூஸ் நிறுவனரும் செய்தியாளர்களின் உயிரிழப்பு நேரிடும் போதெல்லாம் உதவிகள் செய்து வரும் திரு.செய்யது ஆப்தீன்   தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், மேலும் நமது சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய தோழர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தேவையான உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறியுள்ள திரு.சையது ஆப்தீன்  பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்து வந்த தஞ்சை திருஞானம் மறைந்து விட்ட காரணத்தால் தஞ்சை மாவட்டத்தச் சேர்ந்த “லியோ யாக்கோப்” மாநிலஒருங்கிணைப்பாளராகநியமனம்செய்யப்பட்டுள்ளார்.மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இவர்கள் இருவருக்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும், மற்றும் இவர்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜெ.அஸ்கர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!