18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் வென்ற கீழக்கரை பள்ளி மாணவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி பாராட்டு

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் வென்ற கீழக்கரை பள்ளி மாணவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி பாராட்டு

எழுதியவர்: keelai April 1, 2017, 3:13 pm

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவி, கிழக்குத்தெரு முஹம்மது ரிபாய்தீன் மகளார் ஹதிஜத் ரிஃப்தா ரிபாய் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மேலத் தெரு ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆவார். இன்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மாணவி ஹதிஜத் ரிஃப்தாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பேச்சாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. 5 சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் இவர் மாநில அளவில் முதலிடம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பான சாதனையை புரிந்த மாணவி ஹதிஜத் ரிஃப்தாவையும், அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் ஆசிரிய பெருமக்களையும், பெற்றோரையும் கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!