17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காமராஜர் சேவா சங்கத்தின் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா

காமராஜர் சேவா சங்கத்தின் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா

எழுதியவர்: mohan August 3, 2019, 8:40 pm

ஆகட்டும் பார்க்கலாம் காமராஜர் சேவா சங்கத்தின் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா ராமநாதபுரத்தில் லட்சுமி தங்கம் மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் பால்ராஜ்  ,வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் கவிஞர் கலைவாணி ,நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் கோட்டைச்சாமிஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் மருத்துவர் பால்ராஜ்  எப்படி கல்வி கற்க வேண்டும் என்பது குறித்து சுவாரஸ்யமான முறையில் மாணவ மாணவியரிடம் கலந்துரையாடினார் . கவிஞர் கலைவாணி கற்ற கல்வியின் படி எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து மாணவ மாணவியரிடம் தன்னம்பிக்கை உரையாற்றினார். இந்த நிகழ்வில் கிராமப்புறங்களில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது .இந்த நிகழ்வின் இறுதியில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!