தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியம் காயல்பட்டினம் அருகே செயல்படும் DCW நிர்வாகம் அபாயகாரமான அமிலம் மற்றும் இரசாயன பொருட்களை எடுத்து செல்லும் போது எவ்விதமான பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமல் கொண்டு செல்கிறது.தூத்துக்குடியில் இருந்து லாரிகள் முலமாக தொடர்ச்சியாக ஆறுமுகநேரி ஆலைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.இவ்வாறு கொண்டு செல்லும் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல்களாக உள்ளது.இது சம்பந்தமாக திருச்செந்தூர் கோட்டாச்சியாிடம் பலமுறை தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த மாதத்தில் இந்த ஆலையின் மற்றொரு அமிலம் HAM கொண்டுச்செல்லும் வாகனம் புன்னக்காயல் சாலையில் விபத்து எற்பட்டது குறிபிடதக்கது.எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இவ்வாறான அபாயகரமான வாகனத்தை இயக்குவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விதிமுறைகளை பின்பற்றால் செயல்படும் DCW நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை.
எழுதியவர்: mohan August 3, 2019, 7:41 pm




You must be logged in to post a comment.