17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் கோயில் ஆடி திருக்கல்யாண விழா முத்தங்கி சேவையில் அம்பாள் உலா

இராமேஸ்வரம் கோயில் ஆடி திருக்கல்யாண விழா முத்தங்கி சேவையில் அம்பாள் உலா

எழுதியவர்: mohan August 3, 2019, 3:18 pm

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா ஜூலை 25ம் ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தினமும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, மாலை வேளைகளில் வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் 10ஆம் நாளான இன்று 03.08.19 பர்வத வர்த்தினி அம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்., சேதுபதி மன்னர்களால் வழங்கப்பட்ட விலை மதிப்பற்ற முத்தங்கி சேவையானது ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் போது மட்டும் பர்வத வர்த்தினி அம்மனுக்கு அலங்கரிக்கப்படுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நாளான நாளை 04.08.19 ராமநாதசுவாமிக்கும் – பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நாளை (4.8.19) மாலை நடைபெற்று அதன் பின் ஆக.5 இரவு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!