நீலகிரி மாவட்டம் எல்கில் பகுதியில் அமைந்நுள்ள சென் ஜூட்ஸ் சர்ச்யில் மாதா சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள.அங்கு உள்ள சிசிடிவி கேமிராவை பரிசோதனை செய்த போது மர்ம நபர் ஒருவர் சர்ச் பின்புற வழியாக உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்துவதும் பொருட்களை வெளியே எடுத்து விசுவதும் பதிவாகி உள்ளது.மேலும் அருகில் சாலையில் நின்றிருந்த நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தி பொருட்களை வெளியே எடுப்பதும் பதிவாகி உள்ளது.சிசிடிவி கேமிரா காட்சிகள் தெளிவாக இல்லாததால் மர்ம மனிதனின் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.மேலும் காவல்துறையினர் தீவிர விசாரனை செய்து வருகிறார்கள்.இந்த சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதகையில் மாதா சிலை உடைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.
எழுதியவர்: mohan August 3, 2019, 3:03 pm




You must be logged in to post a comment.