17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » சத்தியப்பாதை கல்வி அறக்கட்டளை உதவிக்கு நன்றி கூறிய பள்ளி தாளாளர் மற்றும் மாணவ மாணவிகள்.!

சத்தியப்பாதை கல்வி அறக்கட்டளை உதவிக்கு நன்றி கூறிய பள்ளி தாளாளர் மற்றும் மாணவ மாணவிகள்.!

எழுதியவர்: mohan August 3, 2019, 2:39 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரிய காளையும் புத்தூரில் இயங்கி வரும் காயிதேமில்லத் நர்சரி & பிரைமரி பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவ மாணவிகள்படித்து வருகின்றனர் .இந்நிலையில் பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் சிலர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர்

 அவர்களின் படிப்புக்கு உதவிகள் செய்யுங்கள்,அல்லது ஒரு மாணவர் அல்லது மாணவிக்கு வருடத்தில் 10000 ரூபாய் செலவாகிறது யாரேனும் முன் வந்து மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்யுங்கள் என பள்ளியின் தாளாளர் ராஜா முகமது  வேண்டுகோள் விடுத்திருந்தார் .இதனை அறிந்த சத்திய பாதை கல்வி அறக்கட்டளை. சத்திய பாதை புலனாய்வு இதழின் பழநி செய்தியாளர் கார்த்திகேயேன் மூலமாக, சத்தியப்பாதை கல்வி அறக்கட்டளை சார்பாக காயிதேமில்லத் பள்ளிக்கு ரூபாய் 10000 ஆயிரம் அளித்துள்ளனர். இந்த உதவிகளுக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் சத்திய பாதை கல்வி அறக்கட்டளையின் மனித நேய செயலுக்கு நன்றி கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!