17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் August 2, 2019, 11:44 pm

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை அனைத்து கிளைகளின் சார்பில் 2.8.2019 மாலை 7.30 மணியளவில் தெருமுனைக்கூட்டம் முஸ்லிம்பஜாரில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட துணைச்செயலாளர் நசுருதீன் தலைமை வகித்தார் மாவட்ட துணைச்செயலாளர் தினாஜ்கான் தீர்மானங்களை வாசித்தார். நடைபெற்ற  தெருமுனைக்கூட்டத்தில் அப்துல் சமது MISc, ஜமால்உஸ்மானி (TNTJபேச்சாளர்) ஆகியோர்  சிறப்புரையாற்றினர். இறுதியாக மாவட்ட துணைச்செயலாளர் கீழை சித்தீக் நன்றியுரையாற்றினார்.

இத்தெருமுனை கூட்டத்தில் முத்தலாக், முஸ்லீம்கள் மீது நடைபெறும் அடக்குமுறைகள், தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார கூட்டம், இரத்த தானம் முகாம், கீழக்கரையில் உள்ள மதுக்கடைகளை அகற்றுதல் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!