18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடந்த பிரச்சனையில் தொடர்புடைய 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடந்த பிரச்சனையில் தொடர்புடைய 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

எழுதியவர்: mohan August 2, 2019, 3:42 pm

புதுக்கோட்டை மாவட்டம் , ஆலங்குடியில் கடந்த 14 . 07 . 2019 – ம் தேதி அன்று இரவு மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் அவரது தந்தை கணேசன் ஆகியோர் அவர்களது  கடையில் இருந்தபோது முகமது நியாஸ்  முகமது கனி கணேசன் பிரபுதேவா ஹக்கீம் மணி அப்பாலம் ஆகியோர் மதுபோதையில் வாக்குவாதம் செய்து இருவரையும் அருவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.. இச்சம்பவம் தொடர்பாக முருகானந்தத்தின் தம்பி அஜித் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு , ஏழு எதிரிகளும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் . இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிந்துரையின் பேரில் , மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவின்படி ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளரால் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!