கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் குளம் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியதால் வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன் தலைமையிலான ரவுடிகள் வெட்டிக் கொலை செய்தனர்.இந்நிலையில் நேற்றைய தினம் (01.08.19) இரட்டைக்கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்படும் கூலிப்படைத் தலைவன் ஜெயகாந்தன் மதுரை கோர்ட்டில் சரண் அடைய சென்றார். ஆனால் ஒரிஜினல் சான்றிதழ் இல்லை என கோர்ட் ஊழியர்கள் கூறியதால் அவர் தனது சகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜெயகாந்தன் விஷயத்தில் ஏன் குளித்தலை போலீசார் அலட்சியமாக இருக்கின்றனர் என்கிற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்து மத்திய மண்டல ஐஜி வரதராஜூ இன்று (02.08.19) உத்தரவிட்டுள்ளார்.
ரவுடியை கோட்டை விட்ட குளித்தலை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
எழுதியவர்: mohan August 2, 2019, 3:23 pm




You must be logged in to post a comment.