மது போதையில் பள்ளிக்கு வந்து, வகுப்பறையில் மயங்கிக் கிடந்த ஆசிரியரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்செய்துஉத்தரவிட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பனகமுட்லுவைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவர், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான இவர், மாதத்தில் பாதி நாட்கள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர், ‘மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருகிறார்’ என மாவட்ட கல்வி அலுவலருக்கு தொடர்ச்சியாக புகார் செல்லவே, செல்வத்துக்கு ஆறு மாத ஊதிய உயர்வை குறைத்து தண்டனை வழங்கப்பட்டது. அதன்பின்னரும் செல்வம் திருந்தவில்லை.இந்நிலையில் நேற்று (1ம் தேதி) காலை, பள்ளிக்கு வந்த செல்வம் வகுப்பறையில் மது போதையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதுகுறித்து கல்வி அலுவலருக்கு புகார் செல்லவே, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வகுப்பறையில் மட்டையான ஆசிரியர் சஸ்பெண்ட்..!
எழுதியவர்: mohan August 2, 2019, 3:07 pm




You must be logged in to post a comment.