17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ஆய்வு.

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ஆய்வு.

எழுதியவர்: mohan August 1, 2019, 9:36 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் உணவு வழங்குவதில் தாமதம்,சுகாதாரம் இல்லாமல் உணவு வழங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

அதனை தொடர்ந்து உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்தவர்களிடம் உணவின் ருசிகளை கேட்டறிந்தார். பின்பு அம்மா உணவகத்தில் குடிநீர், சமையலறை, பாத்திரம் கழுவும் அறை போன்றவைகளையும் பார்வையிட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!