17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர்: mohan August 1, 2019, 8:30 pm

மதுரை எஸ்.எஸ்.காலனி பார்த்தசாரதி தெருவில் தனியார் அபார்ட்மென்ட்டில் குடியிருந்த கார்த்திகேயன் ..அவரது மனைவி பாரதி, மகன் சபா வயது 14 (மாற்றுதிறனாளி) ஆகிய 3பேரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளர். இதுகுறித்து மதுரை எஸ்எஸ் காலனி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..கார்த்திகேயன் மற்றும் மனைவி பாரதி இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டு  எஸ்.எஸ்.காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். கார்த்திகேயன்  மதுரை முத்துபட்டி பகுதியில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு முன் அதனை விற்று கிடைத்த பணம் கொண்டு வட்டி தொழில் செய்து வந்துள்ளார்..கார்த்திகேயனின் மனைவிக்கு நீரிழிவு நோய் இருந்து வந்துள்ளது. அதனால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவரையும், மகன் சபாவையும் கார்த்திகேயனே  பார்த்து வந்துள்ளார்..இந்நிலையில் அவரது மனைவி நேற்று இறந்த தாக கூறப்படுகிறது, அதில் மனமுடைந்த கார்த்திகேயனோ மனநலம் குன்றிய தன் மகனை கொன்று தானும் தூக்கிட்டு இறந்துள்ளார்..தொடர்ந்து வீடுப்பூட்டிய நிலையில் இருந்திருக்கிறது. அபார்ட்மெண்ட் பராமரிப்பு கட்டணம் வசூலிக்க சென்றவர் கதவை நீண்ட நேரம் தட்டியும் பதிலேதும் இல்லாததால் கதவை திறந்து பார்த்தபோது மூவரும் இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். மதுரை எஸ்எஸ் காலனி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!